பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி - ரயில் நிலையத்திலே நடந்த தருணம்

x

பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு, அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஸ்வின் குமார். இவரது மனைவியான சாந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக, சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டு, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுள்ளளனர்.

ஆனால், ரயில் அரக்கோணம் வந்த நிலையில், சாந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் செய்வதறியாது தவித்த, அஸ்வின் குமார் ரயிலில் இருந்து கீழே இறங்கி சாந்தினியை அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்