மின் வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டி யானை - யாருக்கும் தெரியாமல் புதைத்த விவசாயி..

x

ஓசூர் அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையை யாருக்கும் தெரியாமல் புதைத்த விவசாயியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடூர் கிராமத்தை சேர்ந்த எல்லப்பா தனது விவாசய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்த மின்வேலியில் சிக்கி குட்டி யானை ஒன்று உயிரிழந்த நிலையில், அதனை அவர் தனதுமகனுடன் சேர்ந்து புதைத்துள்ளார்.

இந்நிலையில் குட்டியானை புதைக்கப்பட்ட இடத்தில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் வனத்துறை எல்லப்பா மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்