பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி - ஆம்புலன்ஸிலேயே பிறந்த ஆண் குழந்தை

x

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே, பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தாழவேடு இருளர் காலனியை சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். வேலஞ்சேரி அருகே சென்ற போது, பிரசவ வலி அதிகமாகி ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்