டிச.11ல் அமெரிக்காவில் ரீ-ரிலீசாகும் 'பாபா' - புதுப்பொலிவுடன் திரைக்கு வரும் 'பாபா'

x

ரஜினியின் பாபா திரைப்படம் டிசம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் ரீ-ரிலிசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் சந்திரா இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தில், சில காட்சிகளின் தரத்தை மாற்றி புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்ற நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 11ம் தேதி பாபா படம் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்