"கதம்.. கதம்".. மீண்டும் மிரட்ட வருகிறார் "பாபா"..

x

மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது பாபா திரைப்படம்...

2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா.

இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் அவரே படத்தை தயாரித்தும் இருந்தார்...

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

அதிலும் பாபா முத்திரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரித்தது... இந்நிலையில், பாபா திரைப்படம் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.

நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பாடல்கள் அனைத்தும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது.

விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்