அயோத்தி ராமர் கோயில் சாலிகிராம் கற்களில் ராமர் - சீதை சிலைகள் -நேர்மறை அதிர்வுகளை தரும் தெய்வீக கற்கள்!

x

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அயோத்தி ராமர் கோயில் தயாராகிவிடும் என... மத்திய அரசு அறிவித்துவிட்ட நிலையில், 60 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன.

அடுத்து... கோயிலின் கருவறையில் வைக்கப்படும் ராமர் - சீதை சிலைகளை தயாரிக்கும் பணி முன்னெடுக் கப்பட்டுள்ளது.

கோயிலின் கருவறையில் வைக்கப்படும் சிலைகள் என்பதால்... எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து.. நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களான சாலிகிராம் கற்களில் சாமி சிலைகளை செதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்னும் சொல்லபோனால் விஷ்ணுவின் சக்தியை உள்ளிடக்கிய கல் தான் இந்த சாலிகிராம் கற்கள் என நம்புகிறார்கள், இந்துக்கள்.

பூஜிக்க உகந்த இந்த கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாக கூடியவை என்றும் கூறுகிறார்கள்.

இதனால் தான் அயோத்தி ராமர் சிலையை செதுக்க சாலிக்கிராம் கற்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்காக சீதையின் பிறப்பிடமாக அறியப்பட்டும் நேபாளத்தின் ஜானக்பூரில் இருந்து லாரி மூலம் அயோத்திக்கு புனித கற்களை கொண்டு வரப்பட்டன. முன்னதாக நேபாள மக்கள் பயபக்தியுடன் கற்களுக்கு பூஜை செய்து வழிபட்ட காட்சிகள் தான் இவை.

இவற்றில் ஒரு கல் 18 டன் எடையிலும், மற்றொரு கல் 16 டன் எடையிலும் உள்ளன.

நேபாளத்தின் ஜானக்பூரில் உள்ள காலி கந்தகி ஆற்றங் கரையில் இந்த சாலிகிராம் கற்கள் அதிகளவில் காணப் படுவதால் அங்கிருந்து அயோத்தி கோயிலுக்காக இரண்டு சாலிகிராம் கற்களை அனுப்பி வைத்துள்ளது, அங்குள்ள ஜானகி கோயில் நிர்வாகம்.


Next Story

மேலும் செய்திகள்