சிங்கப்பெண்ணே.. சிங்கப்பெண்ணே.. நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் - அசத்தும் மத்திய பிரதேச பெண்!

x

சிங்கப்பெண்ணே.. சிங்கப்பெண்ணே.. நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் - அசத்தும் மத்திய பிரதேச பெண்!

பெண்களுக்கு பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் கரூர் வந்தார். தேசிய மலையேறும் வீராங்கனையான ஆஷா மால்வியா, நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் கடந்த நவம்பர் 1ஆம் தேதி போபாலில் பயணத்தை தொடங்கி, 7-வது மாநிலமாக தமிழகம் வந்துள்ளார். கரூர் வந்த அவரை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்