’கைலாசா’ சார்பில் விருது அறிவிப்பு... கெத்து காட்டும் குசும்புக்கார நித்தி! - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

x

தனி நாடு, தனி ராஜ்ஜியம் என கெத்து காட்டி வரும் நித்தியானந்தா, மதுரை கிராமிய பாடகர் மதிச்சியம் பாலா உள்ளிட்டோருக்கு கைலாசா நாடு சார்பில் விருது வழங்குவதாக அறிவித்து, மீண்டும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, தப்பிச் சென்று தலைமறைவாகி, கைலாசா என்ற கனவு தேசத்தை உருவாக்கி, அப்பப்போ நானும் இருக்கிறேன் என்பதை வீடியோ மூலம் ஹைலட் செய்யும்போதெல்லாம், சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் படையெடுக்கும்...

கைலாசா எங்கிருக்கிறது? நித்யானந்தா பிடிபடுவாரா? என்றெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள் ஒருபக்கம் எழ, மறுப்பக்கம் சொகுசு வாழ்க்கையுடன், தன்னை கடவுளாக பாவித்து, வீடியோ கிராபிக்ஸில் அவர் அளிக்கும் சக்தி 'வாரே வா' என்பது போல இருக்கும்...

கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு, நித்தியானந்தா செய்யும் குறும்புத் தனங்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது புது சர்ச்சையை உருவாக்கி இணையவாசிகளுக்கு கண்டென்ட் ஆகியுள்ளார் நித்தியானந்தா...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கைலாசா நாட்டின் சார்பில், பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகளை அறிவித்து வழங்கி இருப்பதுதான் தற்போதைய ஹைலைட்.https://youtu.be/yz30-Iw8Zs0

அதன்படி, நித்தியானந்தாவின் சீடர்கள் விருதாளர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகள் குறித்து பேசி, வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளன.

இந்த விருதாளர்கள் பட்டியலில், மதுரை நாட்டுப்புற பாடகர் மதிச்சியம் பாலா, சக்தி கார்த்திக், ராம்ஜி, ராம ரவிக்குமார், ஹனுமன் சேனா ஸ்ரீதர், நாக சுப்ரமணியன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் சிலர், நித்தியானந்தாவின் சீடர்களுடன் வீடியோவில் பேசியுள்ளதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேடப்படும் நபரான நித்தியானந்தாவிடம், தமிழகத்தில் உள்ள கலைஞர்கள் பேசியது எவ்வாறு என கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினரே திணறி வருகின்றனர்.

பேசிய வீடியோ கால்கள் மூலம் நித்தியாநந்தாவை ட்ரேஸ் செய்ய முடியுமா? அவர் இருக்கும் இடம், இத்தனை ஆண்டுகள் கழித்தாவது கண்டுபிடிக்கப்படுமா? - வழக்கம் போலவே இந்தக் கேள்விகளுக்கு இந்த முறையும் விடையில்லை. அடுத்த கைலாசா விருதுகள் அறிவிக்கப்படுவதற்குள்ளாவது இதற்கு விடை கிடைத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.


Next Story

மேலும் செய்திகள்