சீன திரைப்பட சந்தைக்கு உயிர் கொடுத்த 'அவதார் 2'

x

கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ள சீனாவில், அவதார் படத்தின் இரண்டாம் பாகம் சக்கைபோடு போட்டு வருகிறது.

கொரோனா தளர்வுகளுக்கு பிறகு சீனாவில் வெளியான முதல் பிளாக்பஸ்டர் படம் என்ற வகையில், அவதார் படத்தை பார்க்க திரையரங்குகள் நோக்கி சீன மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இருந்த போதும், கொரோனா வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுவதால் கொரோனா பரவல் குறித்து சினிமா ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சரிவில் இருந்த சீன திரைப்பட சந்தை மீண்டும் எழுச்சி கண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்