அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விழா கமிட்டியார்

x

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினருக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி விழா குழுவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகள், விழா குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்த அவனியாபுரம் விழா குழுவினர், அமைச்சர், ஆட்சியருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, விழா குழுவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி அளிக்காதபட்சத்தில், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்