பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய போலீஸ் வாகனம் - சென்னையில் பரபரப்பு

ஆவடியில் ரோந்து பணியை முடித்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போலீசாரின் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் மாரிமுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அதிகாலை பணியை முடித்து கொண்டு ரோந்து வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஜீப்பை ஏட்டு மகாவீரன் இயக்கிய போது, திருமுல்லை வாயில் கல்லரை அருகே மழையால் பிரேக் பிடிக்காத வாகனம் சாலையோரம் இருந்த தள்ளுவண்டி மீது மோதியது. விபத்தில் காவல் ஆய்வாளருக்கு நெஞ்சில் காயமும், ஏட்டுக்கு கை முறிவும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com