ரூ.50 சவாரிக்கு சென்ற இடத்தில் நோ பார்க்கிங் - ரூ.1500 அபராதம் போட்ட போலீசார் -போராட்டத்தில் குதித்த ஆட்டோ ஓட்டுநர்கள்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 50 ரூபாய் சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு, நோ பார்க்கிங்கிற்காக ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முகமது பிலால் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு, குன்னூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் நோ பார்க்கிங்கிற்காக ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனால் முகமது பிலால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அங்குள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்