அம்மா உணவகத்தை மூட வந்த அதிகாரிகள்..கண்ணீர் விட்டு கதறிய பெண்கள் - சேலத்தில் பரபரப்பு

x

சேலம் அருகே, அம்மா உணவகத்தை மூடுவதற்காக வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணியனூர் அம்மா உணவகத்தில்,12 பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களை பணியில் இருந்து வெளியேறும்படி, திமுக கவுன்சிலர் மற்றும் மண்டல குழு தலைவர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, பராமரிப்பு பணி என பொய்யான காரணங்களை தெரிவித்து, அம்மா உணவகத்தை மூடுவதாக கூறி, அதிகாரிகளுக்கு எதிராக பணியாளர்கள் கண்ணீர் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்