சென்னையில் கேப்பே விடாமல் 24 மணி நேரமும் செயல்பட்ட பார் - ஓனருக்கு டோஸ் விட்ட அதிகாரிகள்
தந்தி டி.வி. செய்தி எதிரொலியாக, சென்னை வடபழனியில், அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வடபழனி கங்கை அம்மன் சாலை பகுதியில், 24 மணி நேரமும் மதுபான பார் செயல்பட்டு வந்தது. இதனால் மது அருந்திவிட்டு பலர் ரகளையில் ஈடுபடுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி தந்தி டி.வி.யில் ஒளிபரப்பானது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், அனுமதியின்றி செயல்பட்டு வந்த மது பாரை பூட்டி சீல் வைத்தனர். சட்டவிரோதமாக பார் நடத்திய கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
