அதிரடி ஆட்டம் காட்டும் ஆஸி.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா - 'நாளைக்கு தெரியும் என்ன ரிசல்ட்னு..'

x

அதிரடி ஆட்டம் காட்டும் ஆஸி.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா - 'நாளைக்கு தெரியும் என்ன ரிசல்ட்னு..'


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தடுமாறி வருகிறது.

மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று முழுவதுமாக தடைபட்ட நிலையில், நான்காம் நாள் சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா தங்கள் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 4ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து உள்ளது. ஃபாலோ-ஆன்-ஐ தவிர்க்க தென் ஆப்பிரிக்காவிற்கு இன்னும் 126 ரன்கள் தேவைப்படும் நிலையில், கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்