ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்...அரையிறுதிக்கு கரன் கச்சனோவ் முன்னேற்றம்

x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ரஷ்ய வீரர் கரன் கச்சனோவ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதிய கச்சனோவ், முதல் 2 செட்களைக் கைப்பற்றினார். 3வது செட்டில் 3க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் கச்சனோவ் முன்னிலையில் இருந்தபோது, காயமடைந்து ஆட்டத்தின் பாதியிலேயே கோர்டா வெளியேறினார். இதனால் வாக்-ஓவர் அடிப்படையில் அரையிறுதிக்குள் கச்சனோவ் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்