ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்....மகுடம் சூடினார் அரைனா சபலென்கா

x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபாகினாவை, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் ரைபாகினா வசப்படுத்தினார். எனினும் 2வது செட்டில் அதிரடி காட்டிய சபலென்கா 6க்கு 3 என்ற கணக்கில் தனதாக்கினார். தொடர்ந்து 3வது செட்டிலும் சிறப்பாக ஆடிய சபலென்கா, 6க்கு 4 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முத்தமிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்