அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ - CBI-க்கு புகார் அனுப்பிய அதிமுக

x

தமிழக நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக, சிபிஐ விசாரிக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் மனு அனுப்பியுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும், ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விவாத பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இரண்டாவதாக ஒரு ஆடியோ வெளியானதையடுத்து, இது தொடர்பாக, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும், ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிந்து, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்