மாணவர்கள் கவனத்திற்கு..! எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம், வரும் ஆறாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.(MBBS), பி.டி.எஸ்(BDS) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த‌து.

இந்த நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கால அவகாசத்தை வரும் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com