மாணவர்கள் கவனத்திற்கு..! 10,11,12-ம் வகுப்பு - செய்முறைத் தேர்வு தேதி தேர்வு மாற்றம்

x

10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத் தேர்வுகள், மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது.

அதில், செய்முறை பொதுத் தேர்வுகள் நடத்த போதிய அவகாசம் இல்லை என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறினார்கள்.

இதையடுத்து, ஏற்கெனவே மார்ச் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை திட்டமிட்டிருந்த செய்முறை பொதுத்தேர்வுகளை, மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து 9-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்