அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு... அமலுக்கு வந்த புதிய நடைமுறை

அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு... அமலுக்கு வந்த புதிய நடைமுறை |Post office

அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனிமேல் பிற வங்கிகளுக்கு ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பும் வசதி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது."அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கிலிருந்து பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் வசதி மூலம் பணம் பரிவத்தனை செய்யலாம்" என கடந்த மே 17-ம் தேதி அஞ்சல் அலுவலக துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.மேலும் மே 31ம் தேதி முதல் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆர்டிஜிஎஸ் சேவை மூலமாகவும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய வசதி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com