காந்தி, தராசு, ரூ.10 நாணயங்கள், செருப்பு மாலை... கவனம் ஈர்த்த வேட்பு மனுத் தாக்கல்...! - ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில், பத்மராஜன் என்ற நபர் முதல் ஆளாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் இதுவரை 232 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 233-வது முறையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இரண்டாவதாக, நூர்முகமது என்ற நபர் செருப்பு மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். செருப்பாக உழைப்பேன் என எடுத்துக் கூறும் விதமாக செருப்பு மாலை அணிந்து வந்ததாக கூறப்பட்டது. மூன்றாவதாக வந்த நபர், காந்தி வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது டெபாசிட் தொகை முழுவதும் 10 ரூபாய் நாணயங்களாக எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்