ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரிக்க முயற்சி..கும்பலுக்கு போலி தரச்சான்றிதழ் அளித்த எஸ்.ஐ - காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரத்தில், கோயமுத்தூரை சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் மற்றும் 37 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை அபகரிக்க முயன்ற கும்பல், சுதாகர் என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, அவருக்கு போலியாக ஆதார் கார்டு மற்றும் பிற ஆவணங்களை தயார் செய்திருக்கின்றனர். இதற்கு மணிமங்கலம் காவல் ஆய்வாளர் ரஞ்சித் குமாரும் போலி தரச்சான்றிதழ் வழங்கிய நிலையில், நிலத்தினை பத்திரப்பதிவு செய்த கும்பல், விற்பனை செய்ய முயன்றிருக்கிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கும்பலின் மோசடி திட்டம் அம்பலமானது. இந்நிலையில், 8 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், ஆனந்தன், விஜய் மற்றும் சுபாஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, இந்த கும்பலுக்கு போலி தரச் சான்றிதழ் வழங்கிய மணிமங்கலம் காவல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com