“நான் வரும்போது கால் மேல் கால் போட்டு போனில் பேசுவியா?“ - பார்த்த இடத்திலேயே அடித்து கொலை

x

திருவேற்காடு, ராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர், ஆவடி சாலை காடுவெட்டியை சேர்ந்த நந்தகோபாலுக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து, கடந்த 9 ஆண்டுகளாக 16 லாரிகள் வைத்து டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தேவேந்திரன், அலுவலக வாயிலில் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த நந்தகோபால், தான் வரும்போது மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து செல்போனில் பேசுவதாகக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், கல்லால் தேவேந்திரன் தலையில் பல முறை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தேவேந்திரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவேந்திரனின் மனைவி சசிகலா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நந்தகோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்