நியூ இயர் நைட், செம்ம டைட்... மது பாட்டிலை வீசி போலீஸ் மீது தாக்குதல் - தட்டி தூக்கிய காவல்துறை...

புதுச்சேரியில் காவலரை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் குற்ற பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த சுந்தரராமன் புத்தாண்டு தினத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த பாஜகி நிர்வாகிகள் அகஸ்தியர், தீனா உட்பட மூவர் மதுபாட்டிலால் காவலர் சுந்தரராமனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லாஸ்பேட்டை போலீசார், அகஸ்தியர், தீனா ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவான அண்ணாமலை என்பவரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com