மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் அட்லி - பின்னணியில் விஜயகாந்த் நடித்த பிரபல படம்

x

அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தின் கதை விஜயகாந்த்தின் பேரரசு படத்தின் கதை போன்று உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேரரசு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ள புகாரில், பேரரசு படத்தின் கதையை மையமாக வைத்து ஜவான் படத்தை அட்லி இயக்கி வருவதாக தகவல் பரவி வருவதாகவும், அதன் உண்மை நிலை குறித்து ஆராயுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த புகார் மனு தொடர்பாக வரும் 9ம் தேதிக்குள் விசாரித்து விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்