41 வயதில் 16 ஆயிரம் ஹார்ட் ஆபரேஷன்..தூக்கத்திலே உயிரை பறித்த 'சைலன்ட் அட்டாக்'.. பெரும் அதிர்ச்சியை கிளப்பிய டாக்டர் மரணம்

x

16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவர் , "மாரடைப்பால்" உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது....அது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

காய்ந்துபோன் நதியெல்லாம் வற்றாத கடல பார்த்து ஆறுதல் அடையும் அந்த கடலே வற்றிப்போனால் என்ற பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது பரபரப்பான இருதய நோய் மருத்துவர் மாரடைப்பால மரணமடைந்த செய்தி...

ஆம், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து விட்டு வழக்கம்போல வீடு வந்து சேர்ந்த மருத்துவர் கௌரவ் காந்தி காலையில் வெகுநேரம் ஆகியும் படுக்கையில் இருந்து எழவில்லை...

சந்தேகமடைந்த குடும்பத்தினர் படுக்கை அறைக்கு

சென்று எழுப்பி பார்த்தனர். அவரிடம் இருந்து சின்ன அசைவுகள் கூட இல்லாத நிலையில்,அதிர்ச்சியான குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...

கௌரவ் காந்தியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் தூக்கத்தில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்...

இந்த செய்தியை கேட்ட ஜாம்நகர் பகுதியே கொஞ்சம் அதிர்ச்சியடைந்தது... ஏனெனில் மாரடைப்பில் உயிரிழந்த, கௌரவ் காந்தியே ஒரு இதய நோய் நிபுணர். 41 வயதான கௌரவ் காந்தி 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தவர்.

உடலை பேணி பரிமாரித்து வந்த கௌரவ் காந்தி உயிரிழப்பதற்கு முதல் நாள் நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் தான் இருந்திருக்கிறார்.

வழக்கம்போல தன்னுடைய குடும்பத்தினருடன் பேசிவிட்டு, எந்த அசௌகரியங்களும் இல்லாமல் படுக்கையில் படுத்தவருக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.....

மருத்துவர்கள் இதனை "சைலன்ட் அட்டாக் என கூறுகிறார்கள். பெரும்பாலும் மனிதர்கள் விழிப்பில் இருக்கும் போது வரும் இந்த அட்டாக், சில நேரங்களில் தூக்கத்திலும் வருவதுண்டு...

சாப்பிட்ட உடனே உறங்கச்செல்வது இதற்கு முக்கிய காரணமாகிறது. சிலருக்கு நிம்மதியான தூக்கம் இல்லாமையாலும், அட்ரினல் அதிகரித்து இந்த இறப்பு நிகழ்கிறது. பெரும்பாலும் இளம்வயதினருக்கே இந்த "சைலண்ட் அட்டாக் வருகின்றது என மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்