ஜோதிடம் பார்ப்பவரின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..தமிழக அளவில் 2-ஆவது இடம் பிடித்து சாதனை

x

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழக அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ரங்கசாமி - தனலட்சுமி தம்பதியின் மகன் ராமகிருஷ்ணசாமி. இவர், நாமக்கல் மாவட்டத்தில், தொழில் மையத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வில், இவர் இந்திய அளவில் 117-வது இடம் பிடித்துள்ளார். இவருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே மூன்று முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்