லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர்...பிளான் பண்ணி பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

செங்குன்றத்தில், மின் இணைப்பு பெற 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

புள்ளிலைன் பகுதியை சேர்ந்த பிரேம்சாகர் என்பவர், புதிய மின் இணைப்பு பெற செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தை அணுகிய போது, உதவி பொறியாளர் கணேசன், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வழங்குமாறு, பிரேம் சாகரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்பேரில், ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி பொறியாளர் கணேசனை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com