ரூ.7.5 கோடி சொத்து, மாத வருமானம் ரூ.70K - ஒருநாளில் 12 மணி நேரம் பிச்சை எடுக்கும் வேலை

x

உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர் இந்தியாவில் உள்ள மும்பை மாநகரில் வசித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா போன்ற நாட்டில் ரயில் நிலையம் என்றாலும் சரி கோயில் வாசல் என்றாலும் சரி... ஒருவேளை உணவிற்காக கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட யாசகர்களை கண்டு நாம் கவலை கொள்வதுண்டு.

ஆனால் ஒருவர் தெரு தெருவாக யாசகம் எடுத்ததன் மூலம் இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா..?

வேலை கிடைப்பதில் சிக்கல் அப்படியே வேலைக்கு சென்றாலும் அதை தக்க வைத்துக் கொள்வதில் சிக்கல் என பலரும் தள்ளாடிக் கொண்டிருக்க... யாசகம் எடுப்பதன் மூலம் மட்டும் மாதம் 70 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார், இந்த கோடீஸ்வர பிச்சைக்காரர்.

யாசகம் எடுத்தாலும்... அதில் அவர் காட்டும் சின்சியாரிட்டி, பஞ்சுவாலிட்டியும்... நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இன்று தனது பெயரில் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட் இருந்தும்... தாம் யாசகம் எடுத்து சம்பாதித்த இரண்டு கடைகளை வாடகை விடுவதன் மூலம் மாதம் முப்பதாயிரம் ரூபாய் மாத வருமானம் கிடைத்தும்... நாள் ஒன்றுக்கு பத்து முதல் 12 மணி நேரம் வரைக்கும் பிச்சை எடுக்க சொல்கிறார், உலகின் கோடீஸ்வர யாசகராக அறியப்படும் இந்த பாரத் ஜெயின்.


திருமணமான இவருக்கு பள்ளி படிப்பை முடித்த இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமார் ஏழரை கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான போதும்... குடும்பத்தினர் எவ்வளவோ கேட்டு கொண்டும்... தம்மை கோடீஸ்வரர் ஆக்கிய யாசக தொழிலை... விட்டுவிட இவரது மனம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை.

ப்ரீத்.... (பேரழகன் பட காமெடி - 2.42 - 2.50 https://youtu.be/_T-wP1uDIvo)

க ோடீஸ்வரனாக இருந்தும் கூட இன்று கெட்டப்பை மாற்றி கொண்டு யாசகம் எடுப்பதை குலத் தொழிலாக போற்றி வருகிறார், பாரத் ஜெயின்.


Next Story

மேலும் செய்திகள்