"ஈரோட்டில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு.. எது நடந்தாலும் ஈபிஎஸ் தயார்" - பரபரப்பு தகவல் சொன்ன ஆஸ்பயர் சுவாமிநாதன்

ஈரோட்டில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு.. எது நடந்தாலும் ஈபிஎஸ் தயார் - பரபரப்பு தகவல் சொன்ன ஆஸ்பயர் சுவாமிநாதன்
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவித்ததிலிருந்து நொடிக்கு நொடி பரபரப்புக்கு பஞ்சமில்லை. திமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லாமல், வேட்பாளரை அறிவிக்கும் முன்பே கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க திமுகவின் மூத்த அமைச்சர்கள் களமிறங்கிவிட்டனர். ஆனால் அதிமுகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. இன்று காலையில் ஓபிஎஸ்ஸின் செய்தியாளர் சந்திப்பு, நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகியும் அரசியல் விமர்சகருமான ஆஸ்பயர் சுவாமிநாதன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பாஜக சார்பில் அண்ணாமலையே கூட வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல, பாஜகவைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்துவிட்ட ஈபிஎஸ், அதனால் உண்டாகும் பின்விளைவுகளைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக சின்னம், இடைத்தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை நம்மிடையே தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்