ஆசிய 'Mixed Team' பேட்மிண்டன்... கஜகஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்தியா

x

துபாயில் நடைபெற்றுவரும் ஆசிய MIXED TEAM பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் கஜகஸ்தானை இந்தியா வீழ்த்தியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாயும், மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்துவும் நேர் செட்களில் வெற்றி கண்டனர். இதேபோல் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவிலும் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி வாகை சூடிய நிலையில், 5க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்