"ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார்" -ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேச்சு

x

ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக முஸ்லிம் அடையாளத்துக்கு எதிரானது என்றும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை ஒழிப்பதே அவர்களின் உண்மையான செயல்திட்டம் என்றும் கூறினார்.

மேலும், நான் உயிருடன் இருக்கும் போதோ அல்லது எனது மறைவிற்கு பிறகோ, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் இந்திய பிரதமர் ஆவார் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்