மாற்று சமூக இளைஞரை மணந்தததால்... பெற்றோர் மறுப்பு... மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு செல்போன் கடை வைத்திருக்கும் ரிக்கப் சந்தின் மகள் சோனல் குமார், வீட்டை விட்டு வெளியேறி, அதே பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் உறவினர்களுக்கு பயந்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது, பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க கோரி, பெண்ணின் உறவினர்கள் போலீசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், போலீசார் மறுப்பு தெரிவித்ததால், 50-க்கும் மேற்பட்டோர் திடீரென மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்....

X

Thanthi TV
www.thanthitv.com