"சிபிஐ, அமலாக்க துறையை 'பாஜக சேனா' என மாத்திடுங்க.." அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

x

சிபிஐ மற்றும் அமலாக்க துறையின் பெயரை பாஜக சேனா என்று மாற்ற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், விசாரணை அமைப்புகள் சோதனை செய்தாலோ அல்லது ஒருவரைக் கைது செய்தாலோ, அவர் தவறு செய்திருக்க வேண்டும் எனத் தோன்றிய காலம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று விசாரணை அமைப்புகள், பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன என்றும் அந்தப் பதவில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்