"இரண்டு கட்சிகள் அடித்தது இவ்வளவு கொள்ளை" - வெளிப்படையாக கூறிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

x

ஒன்பது ஆண்டுகளில் மோடி அரசு இந்தியாவைக் கொள்ளையடித்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ச‌த்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உரையாற்றினார். சத்தீஸ்கரில் ஊழலில் இருந்து விடுபட, ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த கொள்ளையின் அளவு, 250 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் செய்த கொள்ளையை விட அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி கூட 75 ஆண்டுகளில் இவ்வளவு கொள்ளை அடிக்க வில்லை என்றும் கெஜ்ரிவால் விமர்சித்தார். ஆம் ஆத்மி கட்சி சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரமும் இலவச மின்சாரம், சிறந்த பள்ளிகள், தரமான கல்வி, மருத்துவம் இலவச குடிநீர், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்