"அருணாச்சல் இந்தியாவிற்கே சொந்தமானது"... இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா

x

தொடர்ந்து எல்லை பகுதிகளில் அத்துமீறி வரும் சீனா, அருணாச்சல் பிரதேசத்தில் புதிய கட்டமைப்புகள், வீடுகள் மற்றும் சாலைகளை உருவாக்கி ஆக்கீரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக செனட் சபையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதன் படி, அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், அருணாச்சல் பிரதேசம் மற்றும் சீனாவிற்கு இடையேயான மெக்மனோன் எல்லை கோடு சர்வதேச எல்லை கோடு என்றும் அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயலும் சீனாவின் செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்