அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. கொள்ளையர்களை கண்டுபிடித்த போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி
அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. கொள்ளையர்களை கண்டுபிடித்த போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த 13ஆம் தேதி நடந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பிடிபட்ட நிலையில் 31.7 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு உள்ளிட்ட 18 பேரை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். வங்கிக் கொள்ளையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும் காவல்துறையினருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படும் என டிஜிபி ஏற்கனவே அறிவித்த நிலையில் பாராட்டும், சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..
Next Story