விமானத்தில் மதுபோதையில் அட்டகாசம்... நடுவானில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது

x

விமானத்தில் மதுபோதையில் அட்டகாசம்... நடுவானில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது


ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில், பிசினஸ் வகுப்பில் சங்கர் மிஸ்ரா என்பவர் பயணித்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த சங்கர் மிஸ்ரா, தனக்கு அருகில் பயணித்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் வெளியானதும், சங்கர் மிஸ்ராவை அடுத்த 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய ஏர் இந்தியா நிறுவனம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்