மது போதையில் தகராறு.. பார் ஊழியர்களை காலி பாட்டில்களால் தாக்கிய இருவர் கைது

x

கோவை மது போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் காலி பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் மீது வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அறிவொளி நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக்கில் தினேஷ் மற்றும் அஜித் என்பவர்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அவர்கள் டாஸ்மாக்கில் உள்ள மேசையை சேதம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஊழியர்கள் அவர்களை கண்டித்துள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த அவ்விருவர் காலி பாட்டில்களை கொண்டு எறிந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து ஊழியர்கள் அளித்த புகாரில், இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்