மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த A.R.ரஹ்மான்..வெளியான சூப்பர் தகவல்

x

அண்மையில் ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய மாரி செல்வராஜ், A.R.ரஹ்மானை கேமரா முன்பு நிறுத்தி, 'ஆக்‌ஷன்' என கூறியது மிகவும் மகிழ்ச்சியென தெரிவித்துள்ளார். மேலும், மிகவும் சீரியஸான கதையில் கூட பாடல்களை வைக்க முடியும் என தனக்கு ரஹ்மான் கற்றுக்கொடுத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். முன்னதாக ஆராட்டு என்ற மலையாள படத்தில் மோகன்லாலுடன் கேமியோவாக திரையில் தோன்றிய ரஹ்மான், தமிழில் சிங்கப்பெண்ணே பாடலில் விஜய் மற்றும் அட்லீயுடன் தோன்றினார். அந்த வரிசையில் 'மாமன்னன்' படத்தில் மாரி செல்வராஜ் எப்படி நடிக்க வைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்