நடு வழியில் திடீரென உடைந்த கியர் ராடு.. அரசு பேருந்தை தள்ளி சென்ற பயணிகள்

x

அரூர் அருகே கியர் ராடு உடைந்ததால் நடுவழியில் நின்ற அரசு பேருந்தை பொதுமக்கள் தள்ளிச் சென்ற அவலம் நடந்துள்ளது. அரூரில் இருந்து தீர்த்தமலை வழியாக அம்மாபேட்டை நோக்கி அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. திடீரென கியர் ராடு உடைந்து விழுந்ததால், கியர் போட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு, பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பழுதாகி நின்ற பேருந்தை, அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி தள்ளிச் சென்றனர். கியர் ராடு சரி செய்த பிறகு அரசு பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்