போலீசை தாக்கியதாக ராணுவ வீரர் கைது... திடீரென சாலையில் படுத்து உறவினர்கள் போராட்டம்

x

செஞ்சி அருகே காவலரை தாக்கியதாக ராணுவ வீரர் உட்பட இருவர் கைது‌ செய்யப்பட்ட நிலையில், ராணுவ வீரரை போலீஸ் தாக்கியதாக கூறி அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


நல்லான்பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் கௌரிசங்கர், ரோந்து பணியின் போது சந்தேகம்படும்படி நின்றிருந்த இருவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, மது போதையில் இருந்த அவர்கள் கெளரிசங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குவந்த மற்ற போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் ஒருவர், ராணுவ வீரர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களை போலீசார் தாக்கியதாக கூறி, செஞ்சி நான்கு முனை சந்திப்பில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்