ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 5 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

அருணாச்சல் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ​​கீழே விழுந்த விபத்தில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சீனா எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டுடிங் நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த மலைப்பகுதி கிராமமான மிக்கிங்குக்கு சாலை வசதிகள் கிடையாது. இதனால், மீட்புக் குழுக்கள் மலை மீது ஏறி, விபத்து நடந்த இடத்திற்கு சென்று 5 உடல்களை மீட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com