திடீரென கும்கி யானையை நெருங்கிய அரிக்கொம்பன்... பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்

x

கேரள மாநிலம் சின்னக்கானல் மற்றும் சாந்தன்பாறை பகுதியிலுள்ள மக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானை அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். யானையை பிடிக்க வயநாட்டிலிருந்து 4 கும்கியானைகள் மற்றும் சிறப்புக்குழுவினர் சின்னக்கானல் பகுதிக்கு வந்தடைந்தனர். அரிகொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னக்கானல் சிமெண்ட பாலம் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த கும்கி யானையான கொன்னி சுரேந்திரன் அருகே திடீரென அரிக்கொம்பன் வந்ததால் பதற்றமடைந்த வனத்துறையினர், யானை பாகன்கள் மற்றும் சிறப்புக்குழுவினர் அரிக்கொம்பனை பட்டாசு வெட்டித்து கும்கி யானையிடமிருந்து விரட்டினர்


Next Story

மேலும் செய்திகள்