பொதுமக்களை அச்சுறுத்தும் அரிக்கொம்பன்..தேனி மக்கள் அரசுக்கு கோரிக்கை

x

தேனி மாவட்டம் கம்பத்தில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானை தும்பிக்கையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில், யூடியூபர் ஒருவர் ட்ரோன் பறக்க விட்டு யானையை படம் எடுத்துள்ளார். ட்ரோன் சத்தத்தில் மிரண்ட யானை, காந்திநகர் பகுதிக்கு அருகே உள்ள வாழை தோப்பிற்குள் சென்றது. பின்னர் யானை மிரண்டு ஓடியது. இதனிடையே, யானையை மீண்டும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வர போலீசார் மற்றும் வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்கு வந்த 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து ட்ரோன் பறக்க விட்ட யூட்யூபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்