யார் ஏரியா தாதா.? - இளைஞர்களுக்குள் வெடித்த தகராறு.. ஒருவரை சரமாரியாக தாக்கிய 6 பேர் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை, கோயம்பேடு அருகே ஏரியாவில் யார் தாதா என்ற தகராறில் இளைஞர் ஒருவரை 6 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை, சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன். இவரை கோயம்பேடு, சின்மையா நகர் பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கிய கும்பல், இளைஞரின் இரு சக்கர வாகனத்தை அடித்து நொருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், ஏரியாவில் யார் தாதா என்ற போட்டியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தாக்கப்பட்டது தெரியவர, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்