மதுபோதையில் ஏற்பட்ட தகராறு..பீச்சில் மது அருந்திய போது நண்பனை வெட்டிய கும்பல் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை திருவொற்றியூரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய் என்பவர், தனது நண்பர்களுடன் திருவொற்றியூர் கண்டெய்னர் யார்ட் பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது சஞ்சய்க்கும், அவரது நண்பர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, சஞ்சய் தனது நண்பர்கள் சிலருடன், திருச்சினாங்குப்பம் கடற்கரையில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சிலர், சஞ்சயை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சஞ்சய் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்