அர்ஜென்டினா Vs குரோஷியா - இறுதி போட்டிக்கு முன்னேறப் போவது யார்?

x

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லுசைல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. 2018 உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவை 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி குரோஷியா வெற்றி பெற்றது. இதற்கு அர்ஜென்டினா பழி தீர்க்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளனர். இரு அணிகளும் இறுதி போட்டிக்குள் நுழையும் முனைப்பில் போராடும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


Next Story

மேலும் செய்திகள்