ஊருக்கே கம கம பிரியாணி விருந்து - அசத்திய மெஸ்ஸி ரசிகர்கள்

x

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, சிங்கம்புணரி பகுதியில் ரசிகர்கள் பிரியாணி விருந்து வைத்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இதை விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலும் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, கால்பந்து ரசிகர்கள் பிரியாணி விருந்து வைத்தனர்.

இதில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்